மதுரைக்கு வந்த தேஜஸ் ரயில் இனிப்பு வழங்கி வரவேற்பு

மதுரை, ஜன. 11: மதுரைக்கு நேற்று வந்த தேஜஸ் ரயில் பயணிகளை இனிப்புகள் வழங்கி வரவேற்ற சு.வெங்கடேசன் எம்பி., தேஜஸ் பெயரை, தமிழ்ச்சங்கம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென, ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல வேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 630 ரூபாய் குளிர்சாதன வசதிப்பெட்டியில் செல்வதென்றால் தேஜஸ் ரயில் 900 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கிறது. எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும். தேஜஸ் என்ற பெயரை தமிழ்ச்சங்கம் என்று மாற்றவேண்டும் என கூறினார்.

Related Stories: