மேலூர் நான்கு வழிச்சாலையில் கார் மோதி முதியவர் பலி

மேலூர், ஜன.11: மேலூர் நான்கு வழிச்சாலையில் நடந்து சென்றவர் மீது கார் மோதியதில் முதியவர் பலியானார். ஐந்பேர் காயமடைந்தனர். மேலூர் நான்கு வழிச்சாலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று கார் ஒன்று சென்றது. வஞ்சிநகரம் அருகில் கார் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோரமாக நடந்து சென்ற வஞ்சிநகரத்தை சேர்ந்த கிருஷ்ணன்(60) மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் தலை குப்புற கவிழந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>