×

திருமங்கலம் அருகே ஜெயலலிதா கோயில் ஜன.30ல் திறப்பு முதல்வர்,துணை முதல்வர் வருகை அமைச்சர் உதயகுமார் தகவல்

திருமங்கலம், ஜன.11: திருமங்கலம் அருகே குன்னத்தூரில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா கோயிலை வரும் 30ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதே இடத்தில் நினைவு மண்டபம் மற்றும் ஆசிரியர் பயிற்சி கூடமும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணிகளை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர், கூறியதாவது, வரும் 30ம் தேதி குன்னத்துரில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். பின்னர் நலத்திட்டங்களை வழங்க உள்ளனர்.

மதுரை மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பிரமாண்ட முறையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என்றார். முன்னதாக அமைச்சர் உதயகுமார் திருமங்கலத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில் 7,160 பேர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன், தொழிலாளர் இணை ஆணையாளர் சுப்பிரமணியன், கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், தொழிலாளர் உதவி ஆணையாளர் மைவிழிச்செல்வி, அதிமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஜெ.பேரவை செயலாளர் தமிழழகன், வழக்கறிஞரணி செயலாளர் தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jayalalithaa Temple ,Udayakumar ,Thirumangalam ,Chief Minister ,
× RELATED 15 நாள் கால்ஷீட்; ஷாட்னா நடிப்பார்… கட்னா நிறுத்துவார்…