×

பென்னிக்குக் பிறந்த நாள்

மேலூர், ஜன.11: மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிக்குக் பிறந்த நாள் நேற்று விவசாயிகளால் கொண்டாடப்பட்டது. மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு பென்னிக்குக் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மேலூர் பகுதி விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாறு பாசன சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ், வியாபார சங்க நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags : Birthday ,Penny ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி