ஓட்டலில் திருட்டு

திருமங்கலம், ஜன.11: திருமங்கலம் கண்டுகுளத்தை சேர்ந்த கண்ணன் மனைவி மாரியம்மாள். உசிலம்பட்டி ரோட்டில் மாம்பட்டி கிராமத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடையை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவரின் கடையின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த காஸ் சிலிண்டர்கள், பண்டபாத்திரங்கள், ரொக்கபணம் 5 ஆயிரம் முதலியவற்றை திருடி சென்று விட்டனர். மாரியம்மாள் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>