வாலிபர் தற்கொலை

திண்டுக்கல், ஜன. 11: திண்டுக்கல் அருகே உள்ள சங்கிலித்தேவன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி மகன் வினீத்குமார் (25). இவர், வேலை பார்க்காமல் ஊர் சுற்றியதால், பெற்றோர் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த வினீத்குமார் திருப்பூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். மகனை, அங்கிருந்து அனுப்பி வைக்குமாறு உறவினர்களிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்கள் வினீத்குமாரை சொந்த ஊருக்கு அனுப்பினர். இங்கு வந்த வினீத்குமார், கிராமத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>