துபாய் விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார்

மீனம்பாக்கம், ஜன.11: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புடைய 329 கிராம் தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த ஜாகீர்உசேன்(35) என்ற பயணியின்  உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 329 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.17 லட்சம். சுங்கத்துறையினர் ஜாகீர்உசேனை கைது செய்து  விசாரிக்கின்றனர்.

Related Stories: