ரஜினியை அரசியலுக்கு வர சொல்லி நிர்பந்தித்து ரசிகர்கள் போராட்டம்

சென்னை, ஜன.11: நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர சொல்லி நிர்ப்பந்தித்து ரசிகர்கள் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர். அரசியல்  கட்சி துவங்குவதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் தனது  உடல்நிலை சரியில்லாத காரணமாக அந்த முடிவை கைவிட்டார். இந்நிலையில் ரஜினி  அரசியலுக்கு வரவேண்டும் என போராட்டம் நடத்தப்போவதாக அவரது ரசிகர்கள்  தெரிவித்தனர். ரஜினியின் முடிவை மதித்து, அவரது உடல்நிலையை கருதி இந்த போராட்டத்தில் ரசிகர்கள்  பங்கேற்க கூடாது என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வேண்டுகோள்  விடுத்தார். ஆனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என  சுயநலத்துடன் அவரை நிர்ப்பந்திக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அவரது ரசிகர்கள் நேற்று காலை  போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற  இணை செயலாளர் ராமதாஸ் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. பல்வேறு  மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Related Stories:

>