சென்னை, நவ.26: வரும் 28ம்தேதி நடைபெற இருந்த, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம், வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இந்த மாமன்ற கூட்டம் தற்போது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாமன்றக் கூட்டம் நடைபெறும் நாள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
