- கல்பக்கம் அணுசக்தி நிலையம்
- சென்னை
- கல்பாக்கம் அணு மின் நிலையம்
- கல்பாக்கம் அணு நிலையம்
- சென்னை அணு
- நிலையம்
- இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
- பாபா
சென்னை, நவ.26: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்ட 2வது அணு உலை, பணி நிறைவடைந்து மீண்டும் உற்பத்தியை துவங்கியது. கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அணுமின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இதில், சென்னை அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒவ்வொரு அணு உலைகளில் இருந்து தலா 220 மெகாவாட் என 2 அணு உலைகளில் இருந்து 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அவைகளில் இருந்து உற்பத்தியாகும் 440 மெகாவாட் மின்சாரமும் மத்திய தொகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை மாநில வாரியாக அவைகளின் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதலாவது அணு உலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை ஏதோ காரணங்களால் அது சரி செய்யப்படாமல், காட்சிப் பொருளாகவே உள்ளது. 2வது அணு உலை இயங்கி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அணு மின் நிலைய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களை கொண்டு பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று 2வது அணு உலை அதன் அணு உற்பத்தியை துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
