- நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாநாடு
- வஜப்பாடி
- தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம்
- கிராமிய நையாண்டி மேல கரகாட்ட கலைஞர் நலச் சங்கம்
- ஜனாதிபதி
- முருகன்
- மாவட்ட செயலாளர்
- சித்தர் மணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கலைத்தாய்…
வாழப்பாடி, நவ.26: வாழப்பாடியில், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. கிராமிய நையாண்டி மேள கரகாட்ட கலைஞர் நல சங்க தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் சித்தர் மணி ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாடக கலைஞர்கள் சங்க மாநில தலைவர் கலை மாமணி சத்யராஜ் கலந்து கொண்டார். மாநாடு துவக்கத்தில் வாழப்பாடியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நாட்டுப்புற கலைஞர்கள், நடனமாடியவாறு பேரணியாக வந்தனர். மாநாட்டில் சத்யராஜ் மாநாடு உரையாற்றினார். வாழப்பாடியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மாநாடு நடந்து கொண்டுள்ளது. சுமார் 5,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஊர்வலமாக வந்துள்ளனர். தமிழக அரசு மகளிருக்கு வழங்குவது போல், எங்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். வயது முதிர்ந்த மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
