×

கடந்த 4 ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏராளமான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: கடந்த 4 ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏராளமான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம் என கோவையில் ‘TN RISING’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் ‘புதிதாக முதலீடு செய்பவர்களை வரவேற்கிறேன். மீண்டும் முதலீடு செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இங்கு வந்துள்ள தொழிலதிபர்கள் துணையாக இருப்பார்கள். தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு எப்போதும் இருக்கும். தொழில் வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது திமுக அரசின் லட்சியம்.

மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து திட்டமிட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். கோவையைப் போன்று தமிழ்நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி பெற வேண்டும். தொழில்துறையினர் யாரை சந்தித்தாலும் தமிழ்நாட்டுக்கு முதலீடு செய்ய வாருங்கள் என கோரிக்கை விடுத்து வருகிறேன்.

வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தேன். திராவிட மாடல் ஆட்சியில் 1,016 தொழில் முதலீடு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

2021ல் திமுக ஆட்சிக்கு வரும் போது 62,413 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. தற்போது 79,185 ஆக உயர்ந்துள்ளது. 42 ஆண்டுகளில் 29.69 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசின் PF புள்ளிவிபரம் தெரிவிக்கிறது’ எனவும் உரையாற்றினார்.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Goa ,MLA ,TN RISING ,Investors Conference ,K. Stalin ,
× RELATED வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு...