×

“2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நம்முள் ராமரை எழுப்ப வேண்டும்” – பிரதமர் மோடி உரை

அயோத்தி: “வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் விரும்பினால், நம்முள் ராமரை நாம் எழுப்ப வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயில் கோபுர உச்சியில் காவிக்கொடி ஏற்றும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் இணைந்து காவிக்கொடியை கோயில் உச்சியில் ஏற்றினர். பின்னர் பேசிய அவர், “ராமர் கோயில் கட்டுமானத்தில் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருவரால் கோயிலுக்குள் வர முடியாவிட்டாலும் அவர் வெளியில் இருந்தவாறு கோயில் கொடியை வணங்கினாலே அவர் கோயிலுக்கு வந்ததன் பலனைப் பெறுவார் என்கின்றன நமது புராண நூல்கள். கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியின் மையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

2047ல் இந்தியா தனது சுதந்திர தினத்தின் 100-ம் ஆண்டை கொண்டாட உள்ளது. அதற்குள் நாம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க வேண்டும். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.ராமர் என்பது ஒரு நபர் அல்ல. அவர் ஒரு மதிப்பு. 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க விரும்பினால், நாம் நமக்குள் ராமரை எழுப்ப வேண்டும். இதற்கான தீர்மானத்துக்கு இந்த நாளைவிட சிறந்த நாள் எதுவாக இருக்க முடியும்.”இவ்வாறு கூறினார்.

Tags : India ,PM Modi ,Ayodhya ,Modi ,Ramar Temple ,Ayothi ,
× RELATED புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்;...