ஆவடி காவல் நிலையத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஆவடி, ஜன. 11: கணவன் மிரட்டியதால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் ஆவடி காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி, அடுத்த மோரை திருமலை நகரை சேர்ந்தவர் கண்ணன் (34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி (29). இதே பகுதி அரசம்பாக்கத்தில் உள்ள செங்கல்சூளையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் சுந்தரிக்கும் செங்கல்சூளையில் வேலை பார்க்கும் மோரை கன்னியம்மன் நகரைச் சேர்ந்த ஆனந்த் (32) என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி, சுந்தரி, கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்து விட்டு கடந்த 4ம் தேதி ஆனந்தனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கணவன் கண்ணன் மனைவி சுந்தரியை தேடினார். அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கண்ணன் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரி மற்றும் ஆனந்தனையும் தேடினர். இதற்கிடையில் கண்ணன், சுந்தரியின் செல்போனை தொடர்பு கொண்டு நேற்று பேசினார். அப்போது, அவர் ‘‘நீ இல்லாவிட்டால் 4 பெண் குழந்தைகளை என்னால் வளர்க்க முடியாது. நான் விஷம் அறிந்துவிட்டேன் சாகப் போகிறேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் பயந்துபோன சுந்தரி, தனது கள்ளக்காதலன் ஆனந்தனும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சுந்தரியும் ஆனந்தனும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனையடுத்து பதறிப்போன போலீசாரும் உறவினரும் இருவையும் மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர்கள் இருவரும் டாக்டரிடம் வரும்வழியில்  விஷம் குடித்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனந்தன் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆனந்தன் அனுப்பிவைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>