×

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 3 பகுதி செயலாளர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை, ஜன.11: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 3 பகுதி செயலாளர்களை நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக நிர்வாக வசதிக்காகவும், கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி அம்பத்தூர் வடக்கு, அம்பத்தூர் தெற்கு, அம்பத்தூர் கிழக்கு ஆகிய 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட அம்பத்தூர் வடக்கு பகுதி 79, 80, 81, 85, 86 ஆகிய 5 வட்டங்கள் கொண்டதாகவும், அம்பத்தூர் தெற்கு 87, 88, 89, 90, 93 ஆகிய 5 வட்டங்கள் கொண்டதாகவும், அம்பத்தூர் கிழக்கு பகுதி 82, 82அ, 83, 83அ, 84 ஆகிய 5 வட்டங்கள் கொண்டதாக அமைகிறது.

இதில், அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளராக ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளராக டி.எஸ்.பி.ராஜகோபால், அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளராக கொரட்டூர் வெங்கட்ராம நகரை சேர்ந்த எம்.டி.ஆர்.நாகராஜ் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இந்த பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர்களாக கொரட்டூர் து.ஜெகநாதன், பட்ரவாக்கம் ராம.இளங்கோவன், கொரட்டூர் ர.விமலன், கொரட்டூர் எம்.எம்.கிருஷ்ணமூர்த்தி, பாரிநகர் க.பாபு, கள்ளிகுப்பம் இ.நடராஜன், மேனாம்பேடு எஸ்.கோதண்டன், கொரட்டூர் கே.ராஜ்குமார், மாதனாங்குப்பம் பொற்.பாபு இளஞ்செழியன், காமராஜ் நகர் முத்துக்குமார், கொரட்டூர் ஆறுமுகம், கொரட்டூர் ஆர்.செந்தமிழ்செல்வன், கொரட்டூர் ஆர்.லட்சுமி, கொரட்டூர் எஸ்.உஷா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Area Secretaries ,Ambattur Assembly Constituency ,Thuraimurugan Announcement ,
× RELATED சென்னையில் பல்வேறு இடங்களில்...