×

அரியன்வாயல் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி, ஜன. 11:  மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்டது அரியன் வாயல் கிராமம். இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வாக்களிக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கூடம் சென்று வாக்களிக்கும் நிலை உள்ளது. மேலும்  இப்பகுதியில் ரயில் நிலையம் இருப்புப்பாதை இருப்பதால் அதனை கடந்து செல்ல முதியவர்களும் பெண்களும் மிகுந்த சிரமம் அடையும் சூழல் உள்ளது. இந்த சிரமங்களால் பலர் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டும் நிலையும் உள்ளது. தற்போது கொரோனா நெருக்கடியால் ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் என தேர்தல் ஆணையம் புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்கும் பணிகளை செய்து வருகிறது. இந்த அரியன்வாயல் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் காற்றோட்டமான சூழலும் விசாலமான இட வசதி இருக்கிறது. இதனை வாக்குச்சாவடியாக மாற்றி 2021 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்குளிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

Tags : Polling station ,area ,Ariyanvayal ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...