×

பாலியல் பலாத்காரம் குறித்த விழிப்புணர்வு பாடல் சமூக வலை தளங்களில் வைரல்: பெண் காவலருக்கு எஸ். பி. பாராட்டு

திருவள்ளூர், ஜன. 11: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பெண் காவலராக பணியில் இருப்பவர் சசிகலா.  கடந்த 2017-ல் காவல் பணியில் சேர்ந்த இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்.  இவர் கொரோனா நேரத்தில் அது குறித்த விழிப்புணர்வு பாடலை பாடி அது சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது சிறுமி பாலியல் பலாத்காரம் என்பதும் அதனால் தற்கொலை,  கொலை போன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது.  இதனால் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் ஒரு வித அச்சத்துடனேயே வாழந்து வருகின்றனர். காவலராக பணியில் அமர்ந்த நாள் முதல் இது சம்மந்தமான பல்வேறு வழக்குகளை சசிகலா சந்தித்ததால் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.

இதனையடுத்து எந்தெந்த காரணங்களுக்காக பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது அதை எப்படி தடுப்பது,  பெண்களும், குழந்தைகளும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பாடலை எழுதியுள்ளார் சசிகலா.  அந்த  பாடலை பாடி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்,  தொடுதல் குறித்த  விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும்,  தற்காப்பு கலையை கற்று அதன் மூலம் எதிரிகளை தாக்கிட பயப்பட வேண்டாம் என்றும் , குழந்தைகளிடம் மனம் விட்டு பேச நேரம் ஒதுக்குங்கள் என்று பெற்றோருக்கும் அறிவுரை சொல்லும் வகையில் அமைந்துள்ளது பாடல். இது குறித்து தகவல் அறிந்த  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பெண் காவலர் சசிகலாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Tags : rape ,S. ,guard ,
× RELATED ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்