×

எஸ்ஐஆர்க்கு ஆதரவாக போராட்டம்; எடப்பாடி பழனிசாமிக்கு திமுக வர்த்தக அணி கண்டனம்: தீர்மானம் நிறைவேற்றம்

 

சென்னை: கோவையில் வர்த்தக அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர்க்கு ஆதரவாக போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவையில் கடந்த 24ம் தேதி திமுக வர்த்தக அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி சிறப்புரையாற்றினார், மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம், இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என உறுதியாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே விபத்தில் 14 பேர் மரணம் உடல்கள் அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைத்து அடக்கம் செய்த கை காய்வதற்குள் கடந்த 11ம் தேதி தனக்கு பாராட்டு கூட்டம் நடத்திக் கொண்ட ஈவு இரக்கமற்ற சேடிஸ் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஜிஎஸ்டி 2.0 வரி சீராய்வு, வரி குறைப்பு என வியாபாரிகளை ஏமாற்றிய ஒன்றிய அரசை கண்டிக்காமல் பாராட்டு நடத்திய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை கண்டிக்கிறோம். வள்ளுவர் கோட்டத்தைக் கண்டால் கலைஞரின் நினைவு வரும், பள்ளி குழந்தைகளின் காலை உணவு திட்டத்தைக் கண்டால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு வரும், செங்கலையும், செஸ் போர்டையும் பார்த்தால் துணை முதல்வர் நினைவுக்கு வரும். பன் தனியாக வாங்கினால் வரி இல்லை, பட்டர் வாங்கினால் வரியில்லை ஆனால், பன்னுக்குள் பட்டர் ஜாம் இருந்தால் 18% வரி என்பது வட இந்தியர் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் இனிப்புக்கு 5 சதவீதம் வரியும், காரத்திற்கு 18% வரி என்பது தவறு என்று சுட்டிக்காட்டிய ஓட்டல் உரிமையாளரை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்த இடியமினுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் உரிமையாளருக்கு ஆறுதலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்திக்கு தரும் சலுகையை அரிசி மாவுக்கும் தந்து விட வேண்டுகிறோம், பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காங்கிரஸ் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை மீண்டும் தந்திட ஒன்றிய அரசசை வேண்டுகிறோம். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடுவது என்றும் முடிவெடுகக்கப்பட்டது.  கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மோடி அரசு அனுமதி வழங்க வேண்டுகிறோம். அரசியல் அமைப்பை திருத்தியவாது ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கும் வரை ஓய மாட்டோம் என தைரியமாக கூறிய தமிழக முதல்வரை வரவேற்கிறோம்.

தமிழர்களை ரவுடி என பீகார் தேர்தலில் சொன்ன மோடிக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் கொடுப்போம் என தீர்மானிக்கப்படுகிறது. எஸ்.ஐ.ஆர்க்கு ஆதரவு போராட்டம் நடத்திய எடப்பாடிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : SIR ,Dimuka Trade Team ,Edappadi Palanisami ,Chennai ,Goa, S. I. ,ARKU ,Goa ,Timuka Trade Team Executives ,
× RELATED எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற...