×

வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும்: வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,

24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும்

தென்கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையக் கூடும். அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 3 சுழற்சிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருப்பதால் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்தமான் கடற்பரப்பு, குமரி கடற்பரப்பில் உள்ள சுழற்சிகள் ஒன்றிணைந்து நகர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

மாஞ்சோலை ஊத்து பகுதியில் 23 செ.மீ. மழை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாஞ்சோலை ஊத்து பகுதியில் 23 செ.மீ. மழை.

சேத்தியாத்தோப்பில் மிக மிக பலத்த மழை பதிவு

நாலுமுக்கு 22 செ.மீ., சேத்தியாத்தோப்பு, காக்காச்சியில் தலா 21 செ.மீ. மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 19 செ.மீ., கடலூர் பரங்கிபேட்டை, சிதம்பரம், புவனிகிரி, மதுக்கூர், திருக்குவளையில் தலா 14 செ.மீ. மழை பதிவாகியது.

நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு கனமழை நீடிக்கும்

தென் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு கனமழை நீடிக்கும்.

நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நவ.28ல் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நவ.28ல் தஞ்சை, திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கு வாய்ப்பு. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நவ.28ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நவ.29ல் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்

நவ.29ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு.

நவ.29ல் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் மிக கனமழைக்கு வாய்ப்பு. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகையில் கனமழை பெய்ய வாய்ப்பு.

நவ.30ல் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

நவ.30ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, சென்னையில் நவ.30ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புக

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தல்.

குமரிக் கடலில் நிலவும் சுழற்சியால் தமிழ்நாட்டில் மழை

குமரிக் கடல் பகுதியில் நிலவும் சுழற்சியால் தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்படும். டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து நவ.30ல் தெரிவிக்கப்படும்.

இயல்பைவிட 5% கூடுதல் மழைப் பொழிவு

வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட 5% கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. திருப்பூர், கரூர், திண்டுக்கல், சேலம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மழை குறைவாக பதிவு.

 

Tags : Bank Sea ,Senyar ,Meteorological Centre Director ,Amuta ,CHENNAI ,SOUTH ZONE ,METEOROLOGICAL CENTRE ,SEA ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...