×

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் சூர்யகாந்த்: பிரதமர் மோடி வாழ்த்து!

 

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் சூர்யகாந்த், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள சூர்யாகாந்த், 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் 14 மாதங்களுக்கு மேல் இந்தப் பதவியில் வகிப்பார். பூடான், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இவ்விழாவில் பங்கேற்றனர்.

1962-ம் ஆண்டு பிப்​ர​வரி 10-ம் தேதி ஹரி​யா​னா​வின் ஹிசார் பகு​தி​யில் சூர்ய காந்த் பிறந்​தார். ஹிசா​ரில் பள்ளிப் படிப்​பு, கல்​லூரி படிப்பை நிறைவு செய்த அவர் ரோத்​தக் மற்​றும் குருஷேத்​திரா பல்​கலைக்​கழகத்​தில் எல்​எல்​பி, எல்​எல்​எம் சட்​டப் படிப்​பு​களை படித்​தார். 1984-ம் ஆண்​டில் ஹிசார் மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்கறிஞராக பணியை தொடங்​கி​னார். பின்​னர் பஞ்​சாப்​-ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞ​ராக பணி​யாற்​றி​னார். கடந்த 2000-ம் ஆண்​டில் ஹரி​யானா அட்​வகேட் ஜென​ரலாக அவர் நியமிக்​கப்​பட்​டார். கடந்த 2004-ம் ஆண்​டில் பஞ்​சாப்- ஹரி​யானா உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பதவி​யேற்​றார்.

கடந்த 2018-ம் ஆண்​டில் இமாச்சல பிரதேச தலைமை நீதிப​தி​யாக பொறுப்​பேற்​றார். கடந்த 2019-ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யாக அவர் பதவியேற்றார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சூர்யகாந்த்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றிருக்கும் சூர்யகாந்தின் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : Suryakant ,Chief Justice of the ,Supreme ,Court ,Modi ,Delhi ,Chief Justice ,53rd Chief Justice of the Supreme Court ,President of the Republic ,Thraupati Murmu ,
× RELATED புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்;...