- அமர் சிங்
- பாங்காக்
- அமர் சிங் தேவந்தா
- ஆசியா ஓசியானியா
- ஓட்டுநர்
- ஆசியா
- ஓசியானியா
- 100 கிமீ அல்ட்ரா டிரைவிங்
பாங்காக்: ஆசியா ஓசேனியா 100 கிமீ அல்ட்ரா ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமர் சிங் தேவந்தா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். ஆசியா ஓசேனியா 100 கிமீ அல்ட்ரா ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்டுதோறும் சர்வதேச அல்ட்ரா ஓட்ட வீரர்கள் சங்கத்தால் (ஐஏயு) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு இப்போட்டிகள், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேற்று நடந்தன.
இப்போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அமர் சிங் தேவந்தா, மின்னலாய் செயல்பட்டு முதலிடம் பிடித்தார். போட்டி தூரத்தை, 6 மணி நேரம் 59:37 நிமிடங்களில் கடந்த அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, இந்தியா வீரர்களை பொறுத்தவரை புதிய தேசிய சாதனையாக அமைந்தது. இந்தியா சார்பில் இந்த போட்டியில், சவுரவ் குமார் ரஞ்சன், கீனோ ஆன்டனி, வேலு பெருமாள், யோகேஷ் சனப், ஜெயத்ரத், ஆர்த்தி ஜான்வர், ரஞ்சி சிங், சிந்து உமேஷ், நம்கியால் லாமோ, டென்ஸின் டோல்மோ பங்கேற்றனர்.
