×

சாம்பியன்ஸ் கால்பந்து ஈஸ்ட் பெங்கால் தோல்வி

வுஹான்: சீனாவின் வுஹான் நகரில் ஏஎப்சி மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியும், நஸாஃப் ஆப் உஸ்பெகிஸ்தான் அணியும் மோதின. துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடிய உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோராகோன் கபிபுல்லேவா 2 கோல்களும், ஜரினா நோர்போவா ஒரு கோலும் அடித்து அசத்தினர். ஈஸ்ட் பெங்கால் அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் நஸாஃப் ஆப் உஸ்பெகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இப்போட்டியில் இருந்து ஈஸ்ட் பெங்கால் வெளியேறியது.

 

Tags : Champions Football ,East Bengal ,Wuhan ,AFC Women's Champions League ,Wuhan, China ,Nazaf ,Uzbekistan ,Theorakon ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...