- காங்கிரஸ்
- சட்டசபை
- சென்னை
- காங்கிரஸ் கட்சி
- திமுக
- தமிழ்நாடு காங்கிரஸ்
- கிரிஷ் சோடங்கர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகை
- அனைத்து
- இந்தியா
- சூரஜ் ஹெக்டே
- நிவேதித்…
சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரஸ் கட்சி 5 பேர் குழுவை அறிவித்தது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவில், தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு நேற்று சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தியது. இந்த குழுவினர் வரும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்டு பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
