×

வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, முருங்கை விலை அதிகரிப்பு

சென்னை: ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்துவருவதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது. இதனால் தக்காளி மற்றும் முருங்கையின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 1,300 டன் தக்காளி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 வாகனங்களில் 520 டன் தக்காளிகள் வந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட தக்காளி இப்போது ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் முருங்கை காயின் சீசன் முடிந்துவிட்டதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குறைவான முருங்கைக்காய் வருகிறது. இதன் காரணமாக ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Koyambedu ,Chennai ,Andhra Pradesh ,Karnataka ,Koyambedu market ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...