×

செய்துங்கநல்லூரில் மினி கிளினிக் சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

செய்துங்கநல்லூர், ஜன. 7: செய்துங்கநல்லூரில் முதலமைச்சரின் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன்,  துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் ஜெசிமேரி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தனர்.

தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்
எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில், ஏழை எளிய மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.2500, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்களை தந்து கொண்டிருக்கின்ற இந்த ஆட்சி நீடித்திட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும். எனவே அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார்.  தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், செய்துங்கநல்லூர் பஞ்.தலைவர் பார்வதிநாதன், பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன், ஒன்றிய இளைஞரணி முருகையா பாண்டியன், குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட இளைஞர் பாசறை சுப்பிரமணியன், ஜெ.பேரவை செயலாளர் ஐயப்பன், சிறுபான்மை பிரிவு செயலாளர் கோதர், சின்னத்துரை, சுடலைமுத்து, கருங்குளம் மருத்துவ அலுவலர் ஆயிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகபெருமாள், ஜாகிர் உசேன், சமுதாய நல செவிலியர் சாந்தகுமாரி, கிராம சுகாதார செவிலியர்கள் விவேகானந்த விஜயா, மைதிலி, சுஜாதா, மெர்சி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Shanmuganathan MLA ,clinic ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை...