சாத்தான்குளம் அருகே கோயிலில் கொள்ளை

சாத்தான்குளம், ஜன. 7: சாத்தான்குளம் அருகே கோயிலில் புகுந்து நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே இரட்டைகிணறு கிராமத்தில் முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கொம்பன்குளத்தை சேர்ந்த பெருமாள்(50) என்பவர் தினமும் காலை, மாலை சென்று பூஜை செய்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமைமாலை பூஜை செய்ய சென்றபோது கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அம்மனுக்கு அணிவித்திருந்த 5கிராம் பொட்டுதாலி மாயமாகி இருந்தது. மர்மநபர் கோயிலில் புகுந்து அம்மன் நகையை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>