சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சாத்தான்குளம், ஜன. 7: சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமாகினர். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னார்புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் வில்லியம்(34), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்லத்தங்கம்(29). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 28ம் தேதி ஜோசப் வில்லியம், வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி செல்லத்தங்கத்தை காணவில்லை. அவர் 3 குழந்தையுடன் மாயமானது தெரியவந்தது. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லை.

இதையடுத்து ஜோசப் வில்லியம், நேற்று தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ. முத்துசாமி வழக்குப்பதிந்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

Related Stories:

>