தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவேன் ஊர்வசி அமிர்தராஜ் பேட்டி

ஏரல், ஜன. 7: தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்துவேன் என தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் தெரிவித்தார். தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளராக பதவி வகித்து வரும் ஊர்வசி அமிர்தராஜ் கூடுதலாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக கட்சியின் தலைமை நியமித்துள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நேற்று அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பழையகாயல் வந்த அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கொடியேற்றி இலவச சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த காங்கிரஸ் பாடுபடும். இளைஞர்ளை படித்தவர்களாக்கி அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு பெற்று தரப்படும் என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,  தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்த பாடுபடுவேன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். தூத்துக்குடியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும். இப்பகுதி வாழை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் வருங்காலத்தில் செய்து தரப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன் துரை, காங்கிரஸ் எடிசன், முன்னாள் ஓபிசி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், கவுன்சிலர் பாரத் மற்றும் அருளையா, சித்திரை, ஜெயராஜன், ஆனந்த், முத்துக்குமார், ரவீந்திரன், காமராஜ், அந்தோணி காந்தி, தியாகராஜ், சாந்தகுமார், கிருஷ்ணன், சுப்பிரமணியன், அந்தோணி தாமஸ் பங்கேற்றனர்.

Related Stories:

>