×

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை செயல்படுத்த வேண்டும் தேர்தல் அறிக்கை குழுவிடம் ஆவுடையப்பன் வலியுறுத்தல்

ெநல்லை, ஜன. 7:  நெல்லை வந்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்  முரசொலிமாறன் பெரும் முயற்சியில் கொண்டு வரப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட  நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் தொடர்ந்து  செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அந்த திட்டத்தை  செயல்படுத்துவதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் படித்த இளைஞா–்கள் பலர்  வேலைவாய்ப்பு பெறுவர். அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தாமல்  பாழாக்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டத்தை தொடர்ந்து  செயல்படுத்த வேண்டும்.

களக்காடு பகுதியில் அரசு சார்பில் வாழைத்தார்  சந்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். களக்காடு தனி தாலுகாவாக அறிவிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னடியன் கால்வாய், நதியுன்னி கால்வாய், வடக்கு, தெற்கு கோடை மேல் அழகியான் கால்வாய், கோடகன்
கால்வாய், பாளையங்கால்வாய், மருதூர் கால்வாய் ஆகிய கால்வாய்களை சிமென்ட் தளம் லைனிங் அமைத்தும் மதகுகளின் ஷட்டர்களை பழுது நீக்கி சீரமைக்க வேண்டும்.

ஜூன் 1ம் தேதி பாபநாசம் அணை திறப்பதற்கு உரிய வழி வகை செய்யவேண்டும்.    பாபநாசம் அணை மழைக்காலங்களில் நிரம்பி உபரிநீர் வீணாக கடலுக்கு சென்று விடுகிறது. ஆனால் மழை அதிகம் பெய்தும் மணிமுத்தாறு அணை நிரம்பாமல் வறண்டு விடுகிறது. எனவே உபரிநீரை குகைவழிப்பாதை மூலம் மணிமுத்தாறு அணையுடன் இணைத்தால் நெல்லை மாவட்டத்தில் அம்பை, பாளை. பகுதிகளில் இருபோக சாகுபடி உறுதியாகும். எனவே பாபநாசம் - மணிமுத்தாறு அணைகளை இணைப்பதற்கு திமுக ஆட்சியில் திட்டம் தீட்ட வேண்டும். ரூ.369 கோடி திட்ட மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டப் பணிகள் நடந்தது. அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ள இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Election Commission ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...