×

திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை குழு அமைத்ததை வரவேற்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் கமிட்டி 5 உறுப்பினர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த நிலையில் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Tags : Congress ,committee ,Dimuka ,Senior ,President ,P. Chidambaram ,Chennai ,Congress Committee ,Tamil Nadu Legislative Assembly ,India Alliance ,
× RELATED விரைவில் மெகா கூட்டணி சொல்கிறார் அன்புமணி