சமூகரெங்கபுரத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்

பணகுடி, ஜன. 7:  சமூகரெங்கபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தை இன்பதுரை எம்எல்ஏ திறந்துவைத்தார்.

சமூகரெங்கபுரத்தில் பழமையான ஊராட்சி அலுவலகத்தை புதுப்பித்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்பதுரை எம்எல்ஏ முயற்சியில் ரூ.17.64 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. தலைமை வகித்த இன்பதுரை எம்எல்ஏ, புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்துப் பேசினார். விழாவில் பிடிஓக்கள்  கோபாலகிருஷ்ணன், கிஷோர் குமார்,  தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி, அதிமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அந்தோனி அமலராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் அருண்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் மலர்விழி சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சமூகை சந்திரன், கதிரவன் ரோச், கபாலி, சுரேஷ் குமார், தமிழ், துரைசாமி, கருப்பசாமி, ரஸ்வின், தனம், சதீஷ், சுடலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>