×

கேரளா செல்லும் கோழிகள் எண்ணிக்கையில் திடீர் சரிவு

செங்கோட்டை, ஜன. 7:   பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டுசெல்லப்படும் கோழிகள் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. இத்தகவலை  கேரள மாநில கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘பறவைக் காய்ச்சல் பரவும் முன்னர் தினமும் 15 லாரிகளில் கறிக்கோழிகள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் என்றும் தற்போது இந்த லாரிகள் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது.  மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டுவரப்படும் கறிக்கோழிகள்   நோயின்மை சான்றுகளின் அடிப்படையில் கேரளாவுக்குள் அனுமதிக்கபடுகின்றன. இவற்றிற்கு இங்கு தடை விதிக்கபடவில்லை’’ என்றனர்.

Tags : Kerala ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு