×

வெல்டிங் கடையில் புகுந்த விரியன் பாம்பு

நத்தம், நவ. 22: நத்தம் செந்துறைச் சாலையில் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான பெல்டிங் கடை உள்ளது. அதன் அருகில் வாகனங்களுக்கு பெயிண்டிங் செய்யும் பகுதியும் உள்ளது. இங்கு பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது.

இது குறித்து நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் வந்து பாம்பு பிடிக்கும் கருவியை வைத்து லாவகமாக பாம்பை பிடித்தனர்.

அந்த பாம்பு விரியன் எனும் 4 அடி நீளமுள்ள கொடிய விஷப் பாம்பு என்பது தெரியவந்தது. உயிருடன் மீட்ட அந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் நத்தம் வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். அதை அவர்கள் கரந்தமலையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

 

Tags : Natham ,Perumal ,Natham Senthurai Road ,Natham Fire and Rescue Department ,
× RELATED துவரங்குறிச்சியில் சோனியாகாந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்