மருத்துவ கல்லூரி மாணவர்கள் விசில் எழுப்பி போராட்டம்

சிதம்பரம், ஜன. 7: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் நேற்று 29வது நாளாக நீடித்தது. நேற்று மாலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வாயில் முன் ஒன்று திரண்ட மருத்துவ மாணவர்கள் அரசுக்கு தங்களது கட்டண கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் விசில் ஒலி எழுப்பி நூதன போராட்டம் நடத்தினர்.

அப்போது கல்வி கட்டணத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு அரசு உடனடியாக, அரசு கல்லூரிக்கான கட்டணத்தையே தங்களிடம் வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>