போக்சோவில் வாலிபர் கைது

சங்கராபுரம், ஜன. 7: சங்கராபுரம் அடுத்த கடுவனூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அதே கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் விசாரித்ததில் சேலம் மாவட்டம் சிவானந்தபுரம் அருகே உள்ள மொரப்புக்காடு கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் மொக்கை(எ) சுரேஷ்(35) என்பவர் கடத்தி சென்றுவிட்டது தெரிந்தது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories:

>