×

குழித்துறை நகராட்சியில் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்க முடிவு: ஆணையர் மூர்த்தி தகவல்

மார்த்தாண்டம் ஜன.7: குழித்துறை நகராட்சில் கூடுதல் புதிய குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தின் இரண்டாவது வர்த்தக நகரமாக மார்த்தாண்டம் விளங்கிவருகிறது. குழித்துறை நகராட்சிக்குட்பட்ட இப்பகுதியில் ஆண்டுதோறும் மக்கள்  தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 21 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதி மக்களுக்கு ஞாறான்விளையில் அமைந்துள்ள பில்டர்ஹவுஸ் , மற்றும் பெண்டு கடவு பம்ப் ஹவுஸ் மூலம் குடிநீர் சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கப்பெறாமல் உள்ளது.

தற்போது சுமார் 4500 குடிநீர் உள்ள நிலையில் நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு வீடுகள், வணிக நிறுவனங்கள். தொழில் நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த உடன் வழங்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 32 கோடியில் புதிய குடிநீர் கிணறுகள் மற்றும் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. புதிய இணைப்பு தேவைப்படுவர்கள் குழித்துறை நகராட்சி பொறியியல் பிரிவில் புதிய குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகை செலுத்தி சுத்திகரிக்கப்பட் குடிநீர் இணைப்பை உடன் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை குழித்துறை நகராட்சி ஆணையர்  மூர்த்தி மற்றும் பொறியாளர் பேரின்பம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ