வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகன்களுடன் மனு கொடுக்க வந்த பெண். (வேலூர்) முன்னாள் ராணுவ வீரர் கொலையில் மேலும் 3 பேர் கைது

கே.வி.குப்பம், ஜன.7: கே.வி.குப்பம் அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலையில் தலைமறைவான 3 பேர் 6 மாதம் கழித்து நேற்று கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் எல்.என்.புரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன்கள் தாமோதரன்(70), முன்னாள் ராணுவவீரர் கிருஷ்ணன்(65) ஆகியோரிடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 10ம் தேதி தாமோதரனும் அவருடைய மகன்களும், பேரன்களும், இருதரப்பினரின் நிலத்தில் உள்ள பொது இடத்தில் கிருஷ்ணன் கட்டிய நீரேற்றும் அறையை இடித்து தரைமட்டமாக்கினர். இதனை கிருஷ்ணன் தட்டி கேட்டுள்ளார்.

இதில் தாமோதரன் மற்றும் அவரது தரப்பினர் கிருஷ்ணனை தடியாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர். தடுக்க வந்த கிருஷ்ணன் மனைவி சின்னம்மாவையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த கிருஷ்ணனையும், சின்னம்மாளையும் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் கடந்த ஜூலை 11ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனமடங்கி போலீசார் வழக்குப்பதிந்து தாமோதரன் அவரது மகன்கள் முருகன்(50), காந்தி(45), பாஸ்கர்(39) ஆகியோரை கடந்த 2020 ஜூன் 12ம் தேதி கைது செய்தனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் முருகனின் மகன்கள் உட்பட 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சுமார் 6 மாதம் கழித்து இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முருகனின் மகன்கள் மோகன்ராஜ் (27), சரண்ராஜ்(23), காந்தியின் மகன் நவீன்ராஜ்(19) ஆகியோரை நேற்று பனமடங்கி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி, தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>