×

வால்பாறை அருகே வீட்டுத்தோட்டத்தில் பூத்து குலுங்கிய பிரம்ம கமல பூக்கள்

வால்பாறை:வால்பாறை அருகே ரொட்டிக் கடை எஸ்டேட்டில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும் அரிய வகை மலரான பிரம்ம கமல பூக்கள் பூத்துள்ளது. இந்த வகை மலர் மலைப்பகுதிகளில் மிகக் குறைவாகவே காணப்படும்.

இரவு நேரத்தில் மட்டும் மலரும் தன்மை கொண்ட இதன் நறுமணமும், அழகும் காரணமாக “இரவு ராணி” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் ஏராளமான பிரம்ம கமல பூக்கள் பூத்துள்ளதை கண்ட குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் இதனை பார்த்து ரசித்து வருகின்றனர்.

Tags : Valparai ,Roti Kadai Estate ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!