×

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் இருமாநில எல்லையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

உடுமலை, ஜன.7:  கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் இருமாநில எல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உடுமலையிலிருந்து 9/6 செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலம் மூணாறு செல்லும் வழித்தடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக இருமாநில எல்லைகளில் அமைந்துள்ள செக்போஸ்ட்களில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கறிக்கோழி மற்றும் முட்டை வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தமிழகத்தில் இருந்து பல்லடம் உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கறி கோழி, முட்டைகள் செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை. இந்நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜெயராமன் தலைமையில் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் உள்ள 9/6 செக்போஸ்டில் நேற்று முதல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் மருத்துவர் குழு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவங்கி உள்ளது.24 மணி நேரமும் சிறப்பு மருத்துவர் குழு செக்போஸ்டில் முகாமிட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து வருகிறது.

Tags : border ,spread ,Kerala ,
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...