ஊராட்சி செயலர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

உடுமலை, ஜன.7: உடுமலை ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சி செயலராக பணியாற்றிய மாரிமுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு பதிலாக குறிச்சிக்கோட்டை ஊராட்சி செயலாளரை சின்னவீரம்பட்டிக்கு மாற்றி உள்ளனர்.

இதற்கு ஊராட்சி செயலர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் 80 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,`பணியிட மாற்றத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்’ என்றனர்.

Related Stories:

>