×

விற்பனையாளர்கள், விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர், ஜன.7: வேளாண் இயந்திர விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் குழு பிரதிநிதிகள் கொள்முதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டுப்பண்ணைய திட்டத்தின்கீழ் ஒரு கிராமத்தில் 100 சிறு மற்றும் குறு விவசாயிகளை கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் 23 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறையில் 11  உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளது.2020-21ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் தொகுப்பு நிதி ரூ.5 லட்சம் அரசு வழங்கியுள்ளது. அந்த நிதியை கொண்டு உழவர் உற்பத்தியாளர்  குழு உறுப்பினர்கள்  விவசாயத்திற்கு தேவையான பண்ணை கருவிகளை வாங்கி பயன்பெற  வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் குழு பிரதிநிதிகள் கலந்தாய்வு   கூட்டம் நடத்தப்பட்டது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன் இத்திட்டத்தின் செயல்பாடுகள், விவசாய உற்பத்தியாளர் குழு அமைக்கும் முறைகள் மற்றும் சந்தா தொகை பற்றி விவசாயிகள் குழு பிரதநிதிகளுக்கு எடுத்துரைத்தார். தோட்டக்கலை துணை இயக்குநர் பிரேமாவதி மற்றும் பொங்கலூர் வட்டார வேளாண் பொறியாளர்  ஆகியோர் கலந்துகொண்டு திட்ட விளக்கவுரையாற்றினர்.

Tags : Vendors ,Farmers Consultative Meeting ,
× RELATED பழநி கிரிவல வீதியில் சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி