ஜவுளிக்கடையில் தீ விபத்து

உடுமலை, ஜன.7: உடுமலை சீனிவாசா வீதியில் ஒரு ஜவுளிக்கடை உள்ளது. பூட்டியிருந்த இக் கடையில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் புகை வெளியேறி உள்ளது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் கடைக்குள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. உடுமலை தீயணைப்பு நிலையத்தில் விரைந்து வந்து, 4 லாரிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஜவுளிப் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>