×

மேம்பாலத்தின் கீழ் மின் விளக்குகளை பராமரிக்க வலியுறுத்தல்

ஈரோடு : ஈரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பகுதியில், இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது, இந்த மின் விளக்குகளில் ஒரு சிலவற்றை தவிர்த்து மீதமுள்ளவை எரிவதில்லை.

இதனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இரவு நேரங்களில் இருட்டாக உள்ளது. இதனால் மீனாட்சி சுந்தரனார் சாலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி உள்ளது. எனவே, மேம்பாலத்தின் கீழ் பராமரிப்பின்றி எரியாமல் உள்ள விளக்குகளை சீரமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Erode ,Meenakshi Sundaranar Road, ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு 12 – 14ம்...