×

உடுமலையில் மின்தடை

உடுமலை, ஜன. 7: உடுமலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் இன்று (7ம் தேதி) கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம்:உடுமலை நகரம், பழனி சாலை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, போடிப்பட்டி, பள்ளபாளையம், கொங்கலகுறிச்சி, குறிச்சிக்கோட்டை.பூலாங்கிணறு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (8-ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

Tags : Udumalai ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...