வடக்கு தாலுகா அலுவலகத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி

திருப்பூர், ஜன.7: திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. திருப்பூர் குமரன் ரோட்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், சார் நிலை கருவூலம், குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கிளை சிறை மற்றும் கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இப்பகுதிக்கு பல்வேறு அலுவல் தொடர்பாக தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் வரும் இரு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.  இதனால், சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இதுபோன்று அஜாக்கிரதையாக நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு போகும் சம்பவங்களும் நடக்கின்றன. ஆகவே, வாகனங்கள் திருட்டு போகாமல் தடுக்கவும், தாறுமாறாக நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>