முதுமலையில் பூத்துக்குலுங்கும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள்

ஊட்டி, ஜன. 7:  ஜார்கண்ட் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் தற்போது இந்த மலர்கள் மசினகுடி, முதுமலை பகுதிகளில் உள்ள வனங்கல் சாலையோரங்களிலும் ஒரு சில மரங்களில் பூத்துள்ளன. இந்த மலர்கள் மரங்களில் வளரக்கூடியவை. இந்த மலர்கள் சிவப்பு நிறத்தில்  காணப்படும். மேலும், மரங்கள் முழுக்க இலைகள் இன்றி பூத்துக் குலுங்கும்.  இதனை தொலைவில் இருந்து பார்க்கும் போது தீ பிளம்புகள் போல்  காட்சியளிக்கும். இதன் காரணமாகவே இந்த மலர்களை பிளேம் ஆப் தி பாரஸ்ட் என அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். தற்போது ஒரு சில மரங்களில் மட்டுமே இந்த மலர்கள் காணப்படுகிறது. ஓரிரு நாட்களில் அனைத்து மரங்களிலும் பூக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>