×

சீமை கருவேல மரங்களை அகற்ற நிதி வழங்க மறுப்பு குளம், குட்டைகள் புதர்காடுகளாகிறது

கோவை, ஜன.7:  தமிழகத்தில் சீமை கருவேல் மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. மண் வளம் கெடுவதாக அந்த மரங்களை வெட்டி அகற்ற ெபாதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் சீமை கருவேல் மரங்கள் அகற்றும் பணி நடந்தது. தன்னார்வ அமைப்புகளும் சீமை கருவேல் மரங்களை அகற்ற ஆர்வம் காட்டியது. கோவை மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 5096 எக்டரில் (ஒரு எக்டர் என்பது 2.47 ஏக்கர்) வளர்ந்திருந்த சுமார் 7 லட்சம் டன் எடையிலான சீமை கருவேல் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
சீமை கருவேல மரங்கள் பொதுப்பணித்துறையின் குளங்கள், வாய்க்கால், குட்டை, தடுப்பணைகளில் அதிகமாக வளர்ந்திருந்தது. மரங்கள் அகற்றிய இடங்களில் இருந்த புதர்களும் சீரமைக்கப்பட்டது. சீமை கருேவல் அகற்றப்பட்ட பகுதியில் நீர் ேதக்க அளவு கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

கடந்த 2 ஆண்டாக சீமை கருவேல் அகற்றும் பணி நடக்கவில்லை. நடப்பாண்டில் கோவை மண்டலத்தில் சீமை கருவேல் மரங்கள் அகற்ற சுமார் 10 கோடி ரூபாய் ஒதுக்க கோரிக்கை விடப்பட்டது. பொதுப்பணித்துறை நிர்வாகம் சீமை கருவேல் மரங்கள் அகற்ற நிதி ஒதுக்கவில்லை. இதனால் பணிகள் இதுவரை துவக்கப்படவில்லை.  சீமை கருவேல மரங்களை அகற்றும் போதே ஆக்கிரமிப்புகளையும் களைய ஏற்பாடு செய்யப்பட்டது.  ஆனால் மாவட்ட நிர்வாகங்கள், பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி செய்யவில்லை. குளம், தடுப்பணை, வாய்க்கால், குட்டை போன்றவற்றில் கம்பி வேலி அமைக்கவேண்டும். சீமை கருவேல் மரங்கள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் மரங்கள் வளராமல் தடுக்கவேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை சீரமைப்பு பணிகளை நடத்தவேண்டும் என பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் நிதியின்மையால் இதற்கான பணிகள் நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...