×

அசோகபுரம் ஊராட்சியில் கிராம கண்காணிப்பு காவல் அதிகாரி செயல்பாடு துவக்கம்

பெ.நா.பாளையம்,ஜன.7:   கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சியில் கிராம கண்காணிப்பு காவல் அதிகாரி செயல்பாட்டின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில்
எஸ்.பி.அருளரசு கலந்து கொண்டு என்.ஜி.ஜி.ஓ. காலனி நால் ரோட்டில் அதற்கான பெயர் பலகையை திறந்து வைத்தார். அரசு மேல்நிலை பள்ளியில் இந்ததிட்டத்திற்க்கான பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வரவேற்றார். செயல்பாட்டை விளக்கி பேசிய டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி பொதுமக்கள் அவர்களின் பிரச்னைகளை இப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல்அதிகாரியிடம் செல்போன் மூலம் தகவல் சொல்லலாம்.குற்றம் சாராத பொது குறைகளையும் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி தீர்வு காணப்படும் என்று கூறினார். அசோகபுரம்,குருடம்பாளையத்தை மையமாக வைத்து ஒரு தாய் கிராமம் மற்றும் நான்கு கிராமத்திற்க்கு பிரபாகரன் என்ற சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் அவருடன் மேலும் நான்கு காவலர்கள் பொது மக்களிடம் அறிமுகபடுதப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், துணை தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், முன்னாள் துணை தலைவர் சுதாகர், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் தியாகராஜன், செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,Ashokapuram Panchayat ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...