பொன்னாண்டாம்பாளையம் கிராமத்தை ஒன்று படுத்தக் கோரி உண்ணாவிரதம்:200 பேர் கைது

சோமனூர்,ஜன.7: சோமனூர் அடுத்த பொன்னாண்டாம்பாளையம் கிராமத்தை ஒன்று படுத்தக் கோரி அப்பகுதி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதத்தை துவங்கினர். தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 200 பேரை போலீசார் கைது செய்தனர். பொன்னாண்டம்பாளையம் கிராமம் நான்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குள் சிதறிக் கிடப்பதால் அடிப்படை வசதிகளை பெறமுடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் ஏதாவது ஒரு உள்ளாட்சி அமைப்புகளில் சேர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளாக ஊரை ஒன்றுபடுத்த தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இன்று(நேற்று) முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அப்பகுதி பொதுமக்கள் அறிவித்து நேற்று காலை சாலையில் 200க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். காவல்துறையினர் அனுமதி இல்லாமல் தொடர் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்ததால் கருமத்தம்பட்டி போலீசார் உண்ணாவிரதம் மேற்கொண்ட 200 பேரை கைதுசெய்து கணியூர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.அங்கு சூலூர் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாகுமாரி, கருமத்தம்பட்டி டிஎஸ்பி சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பொன்னாண்டாம்பாளையத்தில் உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். இதில் சிலர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ராஜாமணியிடம் ஊரை ஒன்றுபடுத்த கோரிக்கை வைத்தனர். அரசுடன் பேசி விரைவில் அரசாணை பெற்று ஒரே உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ்கொண்டு வர செய்வதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் மாலை 6 மணிக்கு உண்ணாவிரதம் முடித்துக் கொள்ளப்பட்டது.

Related Stories:

>