×

கோயம்புத்தூர் மாரத்தானின் 8-வது பதிப்பு மாபெரும் வெற்றி

கோவை, ஜன.7:  கோயம்புத்தூர் மாரத்தான் 2020 டிச 1 முதல் டிச 31 வரை விரிச்சுவல் ஓட்டமாக இந்த ஆண்டு அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்புடன் ரன் ஸ்மார்ட் என்பதை கருவாக கொண்டு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 6, 500 ரன்னர்கள் பங்கேற்றனர்.  இதுகுறித்து கோவை புற்றுநோய் அறக்கட்டளையின் (சிசிஎப்) மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் பாலாஜி கூறுகையில், ‘ கோயம்புத்தூர் மாரத்தானின் 8 பதிப்பை விர்ச்சுவல் ஓட்டமாக வெற்றிகரமாக நடத்தியது பெருமையாக உள்ளது. மாரத்தான் நடத்துவது பற்றி நாங்கள் யோசித்தபோது கோவை மக்களால் இந்த அளவிற்கு வரவேற்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்று இது நகரத்தால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது. நிகழ்ச்சியின் தரம் மற்றும் அத்துடன் சமூக விழிப்புணர்வும் சேர்ந்து இதனை விசேஷமான ஒன்றாக ஆக்கியுள்ளன. சமூகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் அணுகக்கூடிய வகையில் சிசிஎப் இப்போது தனது சொந்த வளாகத்திற்கு மாறி விட்டது. எங்கள் கனவு திட்டமான அரவணைப்பை தொடங்கியுள்ளோம். கிராமப்புற வீடுகளுக்கு சென்று நோய் தணிப்பு சேவை வழங்கும் ‘மாதிரி திட்டம்’  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது அனைத்தும் கோயம்புத்தூர் மாரத்தானால் சாத்தியமானது’ என கூறினார்.

Tags : Coimbatore Marathon ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்